தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/இண்டர்நெட், ப்ளூடூத், வைஃபை உடன் இவிஎம் இயந்திரம் இணைக்கப்படவில்லை: தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார்

இண்டர்நெட், ப்ளூடூத், வைஃபை உடன் இவிஎம் இயந்திரம் இணைக்கப்படவில்லை: தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார்

இண்டர்நெட், ப்ளூடூத், வைஃபை உடன் இவிஎம் இயந்திரம் இணைக்கப்படவில்லை: தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார்


ADDED : ஆக 24, 2026 08:43 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 24, 2026 08:43 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

லக்னோ: இண்டர்நெட், ப்ளூடூத் மற்றும் வைஃபை உடன் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் இணைக்கப்படவில்லை என்று தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் கூறி உள்ளார்.

மத்திய தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் 2 நாள் பயணமாக லக்னோ சென்றுள்ளார். அங்குள்ள கல்லூரி ஒன்றில் அவர் மாணவர்களுடன் கலந்துரையாடினார். அவரிடம் மாணவர்கள் பல்வேறு கேள்விகள் எழுப்பினர்.

அவற்றுக்கு பதிலளித்து ஞானேஷ்குமார் பேசியதாவது;

சமூக ஊடகங்களில் வரும் தகவல்களை பகிர்வதற்கு, அவற்றை ஏற்றுக் கொள்வதற்கு முன், அதன் ஆதாரங்களையும், நம்பகத்தன்மைகளையும் நாம் சரிபார்க்க வேண்டும். எந்த ஒரு தகவலையும் நம்பும் முன்பாக, அதன் ஆதாரத்தை சரிபார்த்து, நம்பகத்தன்மையை உறுதி செய்வது அவசியம்.

அமெரிக்காவுக்கு செல்ல எண்ணியிருந்த போது, தாயின் விருப்பம் தாய்நாட்டின் மீதான பற்று என்னை இங்கேயே இருக்க தூண்டியது. மக்கள் சேவையில் எனது பயணத்தின் இறுதியாக உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தலைமை தேர்தல் கமிஷனராக பொறுப்பேற்றேன்.

நம் நாட்டில் சுமார் 100 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவ்வளவு பெரிய தேர்தல்களை நடத்த அதிக எண்ணிக்கையிலான அதிகாரிகள், ஊழியர்கள் தேவை. இந்திய தேர்தல்களில் பயன்படுத்தப்படும் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பொதுத்துறை நிறுவனங்களால் தயாரிக்கப்படுகின்றன. அவற்றில் இண்டர்நெட், ப்ளூடூத், வைஃபை வசதிகள் இல்லை .

ஜனநாயகத்தில் இளைஞர்களே மிக முக்கிய சக்தியாக உள்ளனர். எனவே, அரசியலமைப்பு சட்டப்பிரிவு 326ன்படி, 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் தங்களை வாக்காளர்களாக பதிவு செய்து கொள்ள வேண்டும். தேர்தல் கமிஷன் ஏற்படுத்தி உள்ள டிஜிட்டல் வசதிகள் மூலம் வாக்காளர்களாக தங்களை பதிவு செய்து கொள்ளலாம்.

ஓட்டு போடுவது குறித்து மாணவர்கள் தங்கள் குடும்பத்தினருக்கும், சுற்றி உள்ளவர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இதன் மூலம் ஜனநாயகம் மேலும் வலுப்பெறும்.

இவ்வாறு தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us