sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

காய்கறிகளை இப்படி தான் வாங்கணும்; 'மாஜி' அதிகாரிக்கு மனைவி தந்த பலே 'டிப்ஸ்'

/

காய்கறிகளை இப்படி தான் வாங்கணும்; 'மாஜி' அதிகாரிக்கு மனைவி தந்த பலே 'டிப்ஸ்'

காய்கறிகளை இப்படி தான் வாங்கணும்; 'மாஜி' அதிகாரிக்கு மனைவி தந்த பலே 'டிப்ஸ்'

காய்கறிகளை இப்படி தான் வாங்கணும்; 'மாஜி' அதிகாரிக்கு மனைவி தந்த பலே 'டிப்ஸ்'

3


UPDATED : செப் 15, 2024 06:35 PM

ADDED : செப் 15, 2024 05:57 PM

Google News

UPDATED : செப் 15, 2024 06:35 PM ADDED : செப் 15, 2024 05:57 PM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மும்பை: மாஜி ஐ.எப்.எஸ்., அதிகாரிக்கு அவரது மனைவி, காய்கறிகளை எப்படி வாங்கவேண்டும் என்று பேப்பரில் டிப்ஸ் எழுதியதை அவர் இணையத்தில் வெளியிட ஏகத்துக்கும் வைரலாகி உள்ளது.

சினிமா


படம் ஒன்றில் காய்கறிகளை எப்படி வாங்கவேண்டும் என்று பிரபல நடிகர் விஜய் பெண்களுக்கு பாடம் எடுத்திருப்பார். அவர் கூறும் ஒவ்வொரு டிப்ஸையும் பார்த்தவர்கள் தங்கள் வீட்டு கணவர்களை பாடாய் படுத்தியதும் உண்டு. படத்தில் அந்த காட்சி வெகு பிரபலம்.

காய்கறி டிப்ஸ்


இப்போது, சினிமாவில் வந்தது நிஜத்தில் நடந்திருக்கும் விவரம் வெளியாகி இருக்கிறது. மாஜி அதிகாரியின் மனைவி ஒருவர், தமது கணவர் காய்கறிகளை எப்படி வாங்க வேண்டும் என்று படம் போட்டு பேப்பரில் எழுதி மார்க்கெட்டுக்கு அனுப்பி இருக்கிறார். சமர்த்தாய் அதை வாங்கி, அதில் உள்ளவாறே காய்கறிகளை வாங்கிய அவர், அந்த டிப்சை இணையத்தில் ஏற்றி வைரலாக்கி இருக்கிறார். இதே டிப்சை அனைவரும் பின்பற்றுங்கள் என்றும் அறிவுறுத்தி உள்ளார்.

பேப்பரில் எழுதிய மனைவி


அந்த மாஜி அதிகாரியின் பெயர் மோகன் பார்கைய்ன். ஐ.எப்.எஸ்., அதிகாரியாக இருந்தவர். மார்க்கெட்டுக்கு போய் காய்கறிகளை எப்படி பார்த்து வாங்க வேண்டும் என்று ஒரு பேப்பரில் அவரது மனைவி எழுதிய விவரம் தான் இது.

படம் சொல்லும் பாடம்


அவரின் டிப்ஸ் இதோ:

*சிறிது மஞ்சள் மற்றும் சிவப்பு வண்ணத்தில் இருக்கும் தக்காளியைத் தான் வாங்கவேண்டும். தக்காளியில் ஓட்டை இருக்கக்கூடாது.

*வெங்காயம் வட்டமாக, சின்னதாக இருக்க வேண்டும். அதன் ஒரு பகுதி கூர்மையாக இருக்கக்கூடாது. (அருகில் அதன் படத்தையும் வரைந்து இருப்பது கூடுதல் சிறப்பு)

*வெந்தயக்கீரை இலைகள் பச்சையாக இருக்க வேண்டும். உயரம் குறைவாக கொத்தாக இருக்க வேண்டும் (இதில் கீரை படத்தை கிறுக்கி உள்ளார்)

*உருளைக்கிழங்கு சைஸ் நடுத்தரமாக இருக்கவேண்டும். அதில் ஓட்டை, பச்சை வண்ணம் இருக்கக்கூடாது (உருளைக்கிழங்கு படத்தை சிறியதில் தொடங்கி பெரியது வரை வரைந்திருக்கிறார்)

*மிளகாய் கடும் பச்சை வண்ணத்தில் காணப்பட வேண்டும். நீளமாக, நேராக இருக்க வேண்டும். (இதை நீங்கள் இலவசமாக தான் வாங்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருக்கிறார்)

*பாலக்கீரையில் இலைகள் கொத்தாக இருக்கவேண்டும். எங்கும் இலைகளில் ஓட்டை இருக்கக்கூடாது. அதன் உயரம் குறைவாக இருக்க வேண்டும், 2 கட்டுகள் வாங்க வேண்டும் (இந்த டிப்ஸ் அருகில் பேனாவால் கீரை போன்ற ஏதோவொரு படம் வரையப்பட்டு இருக்கிறது)

பாராட்டுகள்


இணையத்தில் அவர் வெளியிட்ட காய்கறி டிப்சை கண்ட பலரும் ஆஹா, ஓஹோ என்று பாராட்டி தள்ளி இருக்கின்றனர். காய்கறி வாங்க தெரியாதவர்கள், எப்படி வாங்குவது என்று தவிப்பவர்கள் இந்த குறிப்புகளை பயன்படுத்திக் கொள்ளலாம், மனைவியின் வசவுகளில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்று தினுசு, தினுசாக பாராட்டியும், கிண்டலடித்தும் விமர்சனங்களை பதிவிட்டு உள்ளனர்.






      Dinamalar
      Follow us