முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா மகன் ஹாவேரி தொகுதியில் 'ரவுண்ட்'
முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா மகன் ஹாவேரி தொகுதியில் 'ரவுண்ட்'
ADDED : பிப் 03, 2024 11:04 PM

ஹாவேரி: பா.ஜ., 'சீட்' கிடைக்கும் என்ற நம்பிக்கையில், முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா மகன் காந்தேஷ், ஹாவேரி தொகுதி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மக்களை சந்தித்து வருகிறார்.
பா.ஜ., முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா. கடந்த ஆண்டு மே மாதம் நடந்த சட்டசபை தேர்தலுக்கு முன்பு, தேர்தலில் போட்டியிட 'சீட்' வேண்டாம் என்று கூறி ஒதுங்கினார்.
இதையடுத்து பிரதமர் மோடி, ஈஸ்வரப்பாவிடம் வீடியோ காலில் பேசி வாழ்த்துத் தெரிவித்தார்.
இந்நிலையில், லோக்சபா தேர்தலில் தனது மகன் காந்தேஷுக்கு, ஹாவேரி தொகுதி 'சீட்' கொடுக்கும்படி, பா.ஜ., மேலிடத்திடம், ஈஸ்வரப்பா கோரிக்கை வைத்துள்ளார்.
இதற்கு ஹாவேரி மாவட்டத்தை சேர்ந்த, முன்னாள் அமைச்சர் பி.சி.பாட்டீல் எதிர்ப்புத் தெரிவித்து உள்ளார். ஷிவமொகா மாவட்டத்தை சேர்ந்த காந்தேஷுக்கு வாய்ப்பு தர கூடாது.
தனக்கு 'சீட்' வேண்டும் என்று கேட்டு உள்ளார்.
பா.ஜ., மாநில தலைவர் விஜயேந்திரா, ஷிவமொகா மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதால், அவரிடம் நைசாக பேசி, மகனுக்கு ஹாவேரி தொகுதி 'சீட்' வாங்கி தர, ஈஸ்வரப்பா அனைத்து வேலைகளையும் செய்து வருகிறார்.
பா.ஜ., 'சீட்' கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில், காந்தேஷும், ஹாவேரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து, மக்களை சந்தித்து, பிரதமர் மோடி செய்த, சாதனைகளை பற்றி கூறி வருகிறார். இதனால் பி.சி.பாட்டீல் எரிச்சல் அடைந்து உள்ளார்.