வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்ட முன்னாள் ராணுவ வீரர் கைது
வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்ட முன்னாள் ராணுவ வீரர் கைது
ADDED : பிப் 08, 2024 05:31 AM

பெங்களூரு: சிறிய காரணத்துக்காக, வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்ட முன்னாள் ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார்.
பெங்களூரு, அப்பிகெரேயை சேர்ந்தவர்கள் பரசுராம், 65. ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவரது குடும்பத்துக்கும், சுரஜ், 31, குடும்பத்துக்கும் இடையே பல ஆண்டுகளாக நட்பு உள்ளது.
நேற்று முன்தினம் இரவு மதுபோதையில் பரசுராம் வருவதை சுரஜ் பார்த்தார். அவரை வீட்டின் வாசலில் வைத்து நிறுத்திய சுரஜ், “வீட்டுக்குள் வர வேண்டாம்,” என கூறியுள்ளார்.
இதனால் கோபமடைந்த அவர், சுரஜுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அங்கிருந்த மற்றவர்கள், இருவரையும் சமாதானம் செய்ய முயற்சித்தனர்.
கோபமடைந்த பரசுராம், உரிமம் பெற்ற துப்பாக்கியை, சுரஜை நோக்கி நீட்டினார்.
அதிர்ச்சியடைந்த அவர், அங்கிருந்து தப்பினார். பரசுராம் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். அதற்குள் சுரஜ், கங்கம்மனகுடி போலீசாருக்கு தகவல் அளித்தார். அங்கு வந்த போலீசார், பரசுராமை கைது செய்து, துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.
