ADDED : பிப் 20, 2025 06:02 PM

புதுடில்லி: குஜராத் மாநிலம் துவாரகை கடல் பகுதியில், இந்திய தொல்லியல் துறையினர் புதிய அகழாய்வுப்பணியை தொடங்கியுள்ளனர்.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கர்மபூமி என்று பக்தர்கள் போற்றும் துவாரகையில் கடந்த 2005 முதல் 2007 வரை அகழாய்வுப்பணி மேற்கொள்ளப்பட்டது.
அதன்பிறகு, 18 ஆண்டுகளாக எந்த அகழாய்வும் நடக்கவில்லை. இந்நிலையில், இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ஏ.எஸ்.ஐ.,) ஆழ்கடல் அகழாய்வை தற்போது துவக்கியுள்ளது.
தொல்லியல் துறை கூடுதல் இயக்குநர் ஜெனரல் பேராசிரியர் அலோக் திரிபாதி தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் குழுவினர், துவாரகை கடற்கரையில் நீருக்கடியில் ஆய்வுகளைத் தொடங்கியதாக கலாசார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முதன்முறையாக அபராஜிதா சர்மா, பூனம் விந்த் மற்றும் ராஜ்குமாரி பார்பினா போன்ற பெண் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களும் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள், குஜராத் கடல் பகுதியில், கோமதி க்ரீக்கிற்கு அருகிலுள்ள ஒரு பகுதியில் ஆய்வை தொடங்கியுள்ளனர்.

