விரிவடையும் இமயமலை ஏரிகள்: வெள்ள அபாயத்தில் வடமாநிலங்கள்
விரிவடையும் இமயமலை ஏரிகள்: வெள்ள அபாயத்தில் வடமாநிலங்கள்
ADDED : அக் 24, 2025 05:40 AM

புதுடில்லி: பருவநிலை மாற்றம் காரணமாக இமயமலை பிராந்தியத்தில் உள்ள பனி ஏரிகள் மற்றும் பிற நீர்நிலைகளின் அளவு கடந்த, 14 ஆண்டுகளில், 9.24 சதவீதம் அளவுக்கு விரிவடைந்துள்ளதாக மத்திய நீர்வள கமிஷன் அறிக்கை தெரிவிக்கிறது.
மத்திய அரசின், 'ஜல்சக்தி' எனப்படும், நீர்வள அமைச்சகத்தின் கீழ் மத்திய நீர்வள கமிஷன் செயல்படுகிறது.
இந்த கமிஷன், நாடு முழுதும் பேரிடர் அபாயம் உள்ள மற்றும் நீர் மேலாண்மைக்கு முக்கியமான பகுதி களை முறையாக கண்காணிக்கிறது.
இமயமலை பிராந்தியத்தில் உள்ள ஏரிகள் மற்றும் நீர்நிலைகள் குறித்து இந்த கமிஷன் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த, 2011ல் இமயமலை பிராந்தியத்தில் உள்ள பனி ஏரிகள் மற்றும் நீர்நிலைகளின் மொத்த பரப்பளவு, 5.30 லட்சம் ஹெக்டேராக இருந்தது. தற்போது, 2025ல் இது, 5.79 லட்சம் ஹெக்டே ராக உயர்ந்துள்ளது.
செயற்கைக்கோள் தரவுகளை அடிப்படையாகக் வைத்து, 'கூகுள் எர்த் இன்ஜின்' தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மொத்தம், 2,843 பனிமலை ஏரிகள் மற்றும் நீர்நிலைகள் கண்காணிக்கப்பட்டன.
அவற்றில், 1,435 நீர்நிலைகளின் பரப்பளவு அதிகரித்தது தெரிந்தது. 1,008 நீர்நிலைகளின் பரப்பு சுருங்கி உள்ளது. நம் நாட்டில் உள்ள, 428 பனிமலை ஏரிகள் விரிவடைந்துள்ளன. அவற்றை பேரிடர் முன்னெச்சரிக்கைக்காக தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.
அவற்றில் லடாக்கில், 133; ஜம்மு காஷ்மீரில், 50; ஹிமாச்சல பிர தேசத்தில், 13; உத்தரகண்டில், 7; சிக்கிமில், 44; அருணாச்சல பிரதேசத்தில், 181 ஏரிகள் அமைந்துள்ளன.
ஏரிகளின் பரப்பளவு அதிகரிப்பதால், பனிமலை ஏரி வெடிப்பு வெள்ள அபாயம் அதிகரிக்கும்.
இத்தகைய வெடிப்பு வெள்ளங்களை முன்கூட்டியே கணிக்க முடியாது. எனவே தொடர் கண்காணிப்பு அவசியம்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

