கடற்கரையோரம் நடந்து செல்லும்போது கிடைத்த அனுபவம்: புகைப்படத்தை பகிர்ந்து ஜனாதிபதி முர்மு பெருமிதம்
கடற்கரையோரம் நடந்து செல்லும்போது கிடைத்த அனுபவம்: புகைப்படத்தை பகிர்ந்து ஜனாதிபதி முர்மு பெருமிதம்
ADDED : ஜூலை 08, 2024 10:21 AM

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலம் புரி கடற்கரையில் எடுத்த புகைப்படத்தை ஜனாதிபதி திரவுபதி முர்மு எக்ஸ் சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: மலைகள், காடுகள், ஆறுகள் மற்றும் கடற்கரைகள் ஆகியவற்றிக்கும் நமக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. இன்று நான் கடற்கரையோரம் நடந்து செல்லும்போது, மெல்லிய காற்று, அலைகளின் சத்தம் மற்றும் ஒரு தியான அனுபவத்தை உணர்ந்தேன். நேற்று புரி ஜெகன்நாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்த போது அமைதியை நான் உணர்ந்தேன். அதே அனுபவம் இன்று கடற்கரையில் கிடைத்தது.
கோடையில், இந்தியாவின் பல பகுதிகள் பயங்கரமான வெப்ப அலைகளை சந்தித்தன. சமீபத்திய ஆண்டுகளில் உலகம் முழுவதும் தீவிர வானிலை நிகழ்வுகள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன. வரவிருக்கும் தசாப்தங்களில் நிலைமை மிகவும் மோசமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
மாசுபாடுகளால் கடல்கள் மற்றும் அங்கு காணப்படும் ஏராளமான தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. ஒரு சிறந்த எதிர்காலத்தை உருவாக்க நம்மால் முடிந்ததைச் செய்வோம் என்று உறுதிமொழி எடுப்போம். இவ்வாறு திரவுபதி முர்மு கூறியுள்ளார்.