போன் டார்ச் ஒளியில் சிகிச்சை மருத்துவ இயக்குனர் விளக்கம்
போன் டார்ச் ஒளியில் சிகிச்சை மருத்துவ இயக்குனர் விளக்கம்
ADDED : பிப் 16, 2025 10:28 PM
பல்லாரி : பல்லாரி பிம்ஸ் மருத்துவமனையில் மொபைல் போன் டார்ச் வெளிச்சத்தில் அளிக்கப்பட்ட சிகிச்சைக்கு, மருத்துவமனை இயக்குனர் கங்காதர் கவுடா விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பல்லாரி பிம்ஸ் மருத்துவமனைக்கு, விபத்தில் காயமடைந்தவரை, சிலர் அழைத்து வந்தனர். அப்போது மின்சாரம் தடைபட்டது. தானியங்கி ஜெனரேட்டர் இருந்தும் உடனடியாக மின்சாரம் வரவில்லை.
அங்கு வந்த மருத்துவர், தனது மொபைல் போனில் டார்ச் லைட் ஆன் செய்து அதன் வெளிச்சத்தில், காயமடைந்தவருக்கு சிகிச்சை அளித்தார். இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் பரவியது.
இதற்கு மருத்துவமனை இயக்குனர் கங்காதர் கவுடா நேற்று விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:
அறுவை சிகிச்சை மையத்தில் ஷிப்ட் முறையில் பணியாற்ற டாக்டர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். மின்சாரம் தடை செய்யப்பட்டால், தானாக ஜெனரேட்டர் இயங்கும் வசதி உள்ளது. இதை சரி செய்ய தொழில்நுட்ப வல்லுனர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
சம்பவ தினத்தன்று பணியில் இருந்தும் பணி செய்யாதவர்கள் பட்டியலை, மருத்துவ அதிகாரியிடம் கேட்டு உள்ளேன். விசாரணையில், தவறு செய்திருந்தால் அவர்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்படுவர்.
இவ்வாறு அவர் கூறினார்.