ADDED : பிப் 22, 2024 11:22 PM
மங்களூரு: திருவனந்தபுரம்- - காசர்கோடு 'வந்தே பாரத்' ரயிலை மங்களூரு வரை நீட்டிக்க, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அனுமதி அளித்துள்ளார்.
கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் இருந்து காசர்கோடு வரை 'வந்தே பாரத்' ரயில் வண்டி எண்: 20631/ 20632 இயக்கப்பட்டு வருகிறது.
இந்த ரயிலை கர்நாடக கடலோர மாவட்டமான மங்களூரு வரை நீட்டிக்கும்படி, தட்சிண கன்னடா தொகுதி பா.ஜ., - - எம்.பி., நளின்குமார் கட்டில், மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு கடிதம் எழுதி இருந்தார்.
இதையடுத்து வந்தே பாரத் ரயிலை, மங்களூரு வரை நீட்டித்து அஸ்வினி வைஷ்ணவ் உத்தரவிட்டு உள்ளார்.
அதன்படி தினமும் காலை 6:15 மணிக்கு மங்களூரில் இருந்து புறப்படும் ரயில் மதியம் 3:05 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும்.
திருவனந்தபுரத்தில் இருந்து மாலை 4:05 மணிக்கு புறப்படும் ரயில் நள்ளிரவு 12:40 மணிக்கு மங்களூரை சென்றடையும்.
காசர்கோடு, கண்ணுார், கோழிக்கோடு, சோரனூர், திருச்சூர், எர்ணாகுளம், ஆலப்புழை, கொல்லம் ரயில் நிலையங்களில் நிற்கும்.
'வந்தே பாரத்' ரயிலை மங்களூரு வரை நீடித்ததற்காக, நளின் குமார் கட்டில், மத்திய அமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.