பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவர் பதவி காலம் நீட்டிப்பு
பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவர் பதவி காலம் நீட்டிப்பு
ADDED : பிப் 01, 2024 07:13 AM

பெங்களூரு: ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையை தயாரித்து உள்ள பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவர் ஜெயபிரகாஷ் ஹெக்டேயின், பதவிக்காலத்தை வரும் 29ம் தேதி வரை நீட்டித்து, அரசு உத்தரவிட்டு உள்ளது.
கர்நாடகாவில் பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவர் ஜெயபிரகாஷ் ஹெக்டே. ஜாதிவாரி கணக்கெடுப்பு குழுவின் தலைவராகவும் உள்ளார். இவர் தலைமையிலான குழு, ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை தயாரித்துள்ளது.
பிப்ரவரி 15ம் தேதிக்குள், அறிக்கை சமர்ப்பிக்க அரசு உத்தரவிட்டு உள்ளது. இந்த அறிக்கைக்கு எதிர்ப்பு எழுந்து உள்ள நிலையில், அறிக்கையை வாங்குவேன் என்று, முதல்வர் சித்தராமையா அறிவித்து உள்ளார்.
இதற்கிடையில் ஜெயபிரகாஷ் ஹெக்டேயின் பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவர் பதவிக்காலம், கடந்த ஆண்டு நவம்பர் 23ம் தேதியே முடிந்தது.
ஜாதிவாரி அறிக்கை தாக்கல் செய்வதற்காக, ஜனவரி 31 வரை பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது.
ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை தாக்கல் செய்ய, இன்னும் 15 நாட்கள் இருப்பதால், அவரது பதவிக்காலத்தை மறுபடியும் நீட்டித்து, அரசு நேற்று உத்தரவிட்டு உள்ளது.
இதன்படி, வரும் 29ம் தேதி வரை, அவர் பணியில் தொடர்வார்.