ADDED : அக் 03, 2024 07:11 PM
சுல்தான்புரி: பெண் வியாபாரியை கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்த சிறுவன் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.
சுல்தான்புரி மார்க்கெட்டின் டி.டி.ஏ., சந்தையின் எப் பிளாக்கில் கடை நடத்தி வரும் பெண் வியாபாரி ஒருவரிடம் மூன்று வாலிபர்கள் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறிப்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இந்த சம்பவம், வியாபாரிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து போலீசார் விசாரணையை துவக்கினர். இந்த சம்பவம் செப்டம்பர் 22ம் தேதி மாலை 6:00 மணி அளவில் நடந்ததை போலீசார் உறுதி செய்தனர். பாதிக்கப்பட்ட வியாபாரி மம்தா தேவி, 28, சம்பவம் குறித்து போலீசில் தாமாக முன்வந்து புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளை அடையாளம் கண்டனர். வீடியோவைக் கொண்டு குற்றத்தில் ஈடுபட்ட ராகேஷ், 19, மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். 3வது குற்றவாளியை கண்டுபிடிக்கும் முயற்சி நடந்து வருகிறது.