தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ இஸ்ரேல் துாதரகத்துக்கு கூடுதல் பாதுகாப்பு

இஸ்ரேல் துாதரகத்துக்கு கூடுதல் பாதுகாப்பு

இஸ்ரேல் துாதரகத்துக்கு கூடுதல் பாதுகாப்பு


ADDED : அக் 02, 2024 08:20 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 02, 2024 08:20 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி:நகரில் உள்ள இஸ்ரேல் துாதரகத்தை சுற்றி டில்லி போலீஸ் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது.

மத்திய கிழக்கு ஆசியாவில் இஸ்ரேல் மீது ஈரான் நேற்று முன்தினம் திடீர் தாக்குதல் நடத்தியது. இதனால் அந்த பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது. இதையடுத்து, டில்லி துக்ளக் சாலைப் பகுதியில் உள்ள இஸ்ரேல் துாதரகத்தைச் சுற்றி டில்லி போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.

துாதரகத்தை சுற்றி கூடுதல் பாதுகாப்பு படையினர் நிறுத்தப்பட்டு, சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக டில்லி காவல்துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

துாதரகம் அருகே இரண்டு முறை ஏற்கனவே குண்டுவெடிப்புகள் நடந்த வரலாறு இருப்பதால், இரண்டு கட்டமைப்புகளைச் சுற்றிலும் பல சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us