ADDED : மார் 31, 2026 11:35 PM

நாட்டின் பாதுகாப்பு, நலன்களுக்கு எதிராக வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்படுவதை தடுக்கவே, வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டத்திருத்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. எந்தவொரு மத அமைப்பையும் குறிவைக்க அல்ல. இதில், எதிர்க்கட்சியினரின் குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை; ஜோடிக்கப்பட்டவை.
கிரண் ரிஜிஜு மத்திய அமைச்சர், பா.ஜ.,
காங்., வெற்றி பெறும்!
கேரள சட்டசபை தேர்தலில் இடதுசாரி வெற்றி பெற பிரதமர் மோடி விரும்புகிறார். அதனால், இடதுசாரி அரசை அவர் விமர்சிப்பதில்லை. மாறாக, காங்கிரசை விமர்சிக்கிறார். இடதுசாரி - பா.ஜ., இடையேயான ரகசிய கூட்டணியை வீழ்த்தி, கேரளாவில் காங்., தலைமையிலான கூட்டணி ஆட்சியை கைப்பற்றும்.
ராகுல் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர், காங்கிரஸ்
ராகுலுக்கு புரிதல் இல்லை!
சபரிமலையில் தங்கம் மாயமான விவகாரத்தில், எந்த புரிதலும் இல்லாமல் காங்., - எம்.பி., ராகுல் எங்கள் மீது குற்றஞ்சாட்டி உள்ளார். இதில் முக்கிய குற்றவாளியான உன்னிகிருஷ்ணன் போத்தி, காங்., தலைவர்கள் சிலருடன் சோனியாவை அவரது வீட்டில் சந்தித்துள்ளார். இதற்கு ராகுல் என்ன பதில் சொல்லப் போகிறார்?
பினராயி விஜயன் கேரள முதல்வர், மார்க்.கம்யூ.,
