ADDED : அக் 05, 2024 04:55 AM
பெங்களூரு: ரேணுகாசாமி கொலை வழக்கில் நடிகர் தர்ஷனுக்கு எதிராக சாட்சிகள் புனையப்பட்டு உள்ளதாக, நீதிமன்றத்தில் வக்கீல் நாகேஷ் குற்றஞ்சாட்டினார்.
சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி, 33, என்பவரை கொலை செய்த வழக்கில் கைதாகி நடிகர் தர்ஷன் பல்லாரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது ஜாமின் மனு மீதான விசாரணை, பெங்களூரு 57வது சிட்டி சிவில் நீதிமன்றத்தில் நேற்று நடந்தது.
தர்ஷன் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் நாகேஷ் வாதாடுகையில், ''ரேணுகாசாமி கொலை வழக்கில் ஆரம்பத்தில் இருந்தே, எனது மனுதாரர் மீது தவறு உள்ளதாக சித்திகரிக்கப்படுகிறது.
அவருக்கு எதிராக மிகப்பெரிய சதி நடக்கிறது. வழக்குப்பதிவு செய்யப்பட்டது முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் ஆனது வரை, ஊடகங்களில் தகவல் பரப்பப்படுகிறது. விசாரணை அதிகாரி மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும். நிறைய சாட்சிகள் புனையப்பட்டு உள்ளன,'' என்றார்.
வாதங்களை கேட்ட பின், விசாரணையை நீதிபதி இன்று ஒத்திவைத்தார்.