ADDED : நவ 09, 2024 01:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: பொது கட்டடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய வசதிகள் இருப்பதை உறுதி செய்ய அரசுக்கு உத்தரவிடும்படி ராஜிவ் ரத்துாரி என்பவர் பொதுநல மனு தாக்கல் செய்தார். இந்த மனு தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
பொது இடங்களை மாற்றுத்திறனாளிகள் எளிதாக அணுகும் வகையிலான வழிகாட்டுதல்களை உருவாக்க வேண்டியது அவசியம். பழைய கட்டடங்களை மாற்றுத்திறனாளிகளின் வசதிக்கு ஏற்ப மாற்றியமைக்க வேண்டும். புதிய கட்டடங்கள் அனைத்தும் அவர்களுக்கான தனிப்பாதையுடன் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
மாற்றுத்திறனாளிகளுக்கு வசதி ஏற்படுத்தாத புதிய கட்டடங்களுக்கு அனுமதி சான்றை நிறுத்தி வைப்பது, அபராதம் விதிப்பது போன்றவற்றை நடைமுறைப்படுத்தலாம்.
இவ்வாறு உத்தரவில் கூறியுள்ளனர்.