sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சென்னப்பட்டணாவில் தோல்வி? கர்நாடக காங்கிரஸ் கூடாரம் பீதி

/

சென்னப்பட்டணாவில் தோல்வி? கர்நாடக காங்கிரஸ் கூடாரம் பீதி

சென்னப்பட்டணாவில் தோல்வி? கர்நாடக காங்கிரஸ் கூடாரம் பீதி

சென்னப்பட்டணாவில் தோல்வி? கர்நாடக காங்கிரஸ் கூடாரம் பீதி


ADDED : நவ 15, 2024 11:01 PM

Google News

ADDED : நவ 15, 2024 11:01 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராம்நகர்: சென்னப்பட்டணா சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் தோற்றுவிடுவோமோ என்ற பீதி, துணை முதல்வர் சிவகுமார், காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் இடையில் ஏற்பட்டுள்ளது.

ராம்நகரின் சென்னப்பட்டணா தொகுதிக்கு கடந்த 13ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. இந்தத் தொகுதியை கைப்பற்ற வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்த, துணை முதல்வர் சிவகுமார் பல வியூகங்களை வகுத்தார்.

வேட்பாளராக தானே களமிறங்குவதாக கூறி வந்தார். ஆனால் கடைசி நேரத்தில் பா.ஜ.,வில் இருந்து யோகேஸ்வரை அழைத்து வந்து சீட் கொடுத்தார்.

ஓட்டுப்பதிவு முடிந்த நிலையில், இடைத்தேர்தலில் வெற்றி பெறுவோமா என்பதில் வேட்பாளர் யோகேஸ்வருக்கே சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

மத்திய அமைச்சர் குமாரசாமியை கருப்பர் என்று, ஜமீர் அகமது கான் விமர்சித்ததால், ஒக்கலிக சமூக ஓட்டுகள் பிரிந்திருக்க வாய்ப்புள்ளது. எனினும் இரு கட்சிக்குமே வெற்றி வாய்ப்பு சமமாக உள்ளதாக யோகேஸ்வர் கூறி சமாளித்தார்.

யோகேஸ்வரின் இந்த கருத்து, பெரும்பாலான காங்கிரஸ் தலைவர்களுக்கும் உள்ளது. சென்னப்பட்டணாவை கைப்பற்றுவதற்காக பல முயற்சிகள் செய்த, துணை முதல்வர் சிவகுமாரும் பீதி அடைந்துள்ளார்.

இதுதொடர்பாக மாகடி காங்கிரஸ் எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணா கூறுகையில், “சென்னப்பட்டணா மக்களின் நாடித்துடிப்பை நன்கு அறிந்தவர் யோகேஸ்வர். அவரே இந்தத் தேர்தலில் கடும் போட்டி ஏற்பட்டது என்று கூறியுள்ளார். அமைச்சர் ஜமீரின் பேச்சால் ஓட்டுக்கள் பிரிந்திருக்க வாய்ப்புள்ளது. என்ன நடக்கிறது என்று 23ம் தேதி பார்க்கலாம்,” என்றார்.

ஸ்ரீரங்கப்பட்டணா காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரமேஷ் பண்டிசித்தே கவுடா கூறுகையில், “சென்னப்பட்டணாவில் இம்முறை கடும் போட்டி நிலவியது உண்மைதான். அமைச்சர் ஜமீரின் கருத்தால் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட வாய்ப்புள்ளது.

''குமாரசாமியும், ஜமீரும் பழைய நண்பர்கள். குமாரசாமி கூறியதால் தான் அவரை கருப்பர் என்ற வார்த்தையை பயன்படுத்தி ஜமீர் விமர்சித்து இருப்பார்,” என்றார்.

துணை முதல்வர் சிவகுமாரின் தம்பி சுரேஷ் கூறுகையில், “சென்னப்பட்டணாவில் காங்கிரஸ் வெற்றி பெரும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. யோகேஸ்வர் என்ன அர்த்தத்தில் கூறினார் என்று தெரியவில்லை. வரும் 23ம் தேதி என்ன நடக்கும் என்று பார்க்கலாம்,” என்றார்.

ஒட்டுமொத்த காங்கிரஸ் தலைவர்களுமே, வெற்றி உறுதி என்ற நம்பிக்கையில் இருப்பதாக, அவர்களின் பேட்டிகள் உணர்த்தவில்லை என, அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.






      Dinamalar
      Follow us