ADDED : அக் 16, 2024 10:24 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரு : பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் தயானந்தா பெயரில், போலியான, 'பேஸ்புக்' கணக்கு திறந்து, மோசடி செய்ய முயற்சி நடந்துள்ளது.
பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் தயானந்தா, அதிகாரபூர்வமான பேஸ்புக் கணக்கு வைத்துள்ளார்.
இவரது பெயரில் போலியான பேஸ்புக் கணக்கு திறந்த மர்ம நபர்கள், அவரது சில நண்பர்களுக்கு தகவல் அனுப்பி, பண உதவி கேட்டுள்ளனர். இதை கண்டு சந்தேகமடைந்த நண்பர்கள், தயானந்தாவிடம் தகவல் கூறினர். அவரும் உடனடியாக போலி கணக்கை, 'பிளாக்' செய்தார்.
இது குறித்து, சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவாகியுள்ளது. மர்ம நபர்களை கண்டுபிடிக்க போலீசார் முயற்சிக்கின்றனர்.