ADDED : ஜூன் 05, 2025 12:12 AM
புதுடில்லி: டில்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்ற நீதிபதி, 'சைபர்' போலீஸ் ஸ்டேஷனில் புகார் மனு அளித்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த, 2024 மே 31ல் அங்கிதா என்ற பெண்ணை கைது செய்ய நான் கைது வாரன்ட் பிறப்பித்ததாக போலியான நீதிமன்ற உத்தரவு சமுகவலை தளத்தில் வலம் வருகிறது.
இதேபோல் கடந்த ஆண்டு டிச., 2ல் சங்கேத் சுரேஷ் சதாம் என்பவரது சொத்தை பறிமுதல் செய்ய நான் உத்தரவிட்டதாக மற்றொரு போலி நீதிமன்ற ஆணை இடம்பெற்றுள்ளது.
இவ்விரு உத்தரவுகளிலும் என்னை முதல்வகுப்பு ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டாக குறிப்பிடப்பட்டுள்ளன.
ஆனால் இதுபோன்ற உத்தரவு எதையும் நான் பிறப்பிக்கவில்லை. மேலும் அந்த உத்தரவில் இடம்பெற்றுள்ள கையெழுத்துகளும் என்னுடையதல்ல.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நீதிபதியின் புகாரின் பேரில், டில்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.