தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/தந்தை மீது போலி போக்சோ வழக்கு

தந்தை மீது போலி போக்சோ வழக்கு

தந்தை மீது போலி போக்சோ வழக்கு


ADDED : ஏப் 18, 2026 01:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 18, 2026 01:19 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி தென் கிழக்கு டில்லியின் கோவிந்த்புரி என்ற பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர், தன் மகளிடம், பாலியல் ரீதியாக, தன் தந்தை அத்துமீறியதாக புகார் கொடுத்தார். இதையடுத்து, கோவிந்த்புரி போலீசார், அந்த நபர் மீது, போக்சோ வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.

அதன் ஒரு கட்டமாக, பாதிக்கப்பட்டதாக கூறப்பட்ட சிறுமியிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது அந்த சிறுமி, தவறாக தன் தாய் புகார் கொடுத்ததையும், தன் தாத்தாவுக்கும், அவரின் மகளுக்கும் இடையே நிலவும் நிலம் தொடர்பான விரோதம் காரணமாக, பொய்யான புகார் கொடுத்ததாக கூறினார் .

அதையும் நம்பாத போலீசார், அந்த பெண்ணை, மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினர். அங்கும், அவருக்கு, எவ்வித பாலியல் அத்துமீறலும் நடக்கவில்லை என்பதை டாக்டர்கள் கூறினர்.

இதையடுத்து, அந்த நபர் மீது தொடர்ந்த போக்சோ வழக்குகளை வாபஸ் பெற்ற போலீசார், தந்தை மீது புகார் அளித்த பெண் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us