ADDED : ஜன 01, 2025 12:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
 நடிகர், இயக்குனர், அரசியல்வாதி என பன்முக தன்மை கொண்ட சிவராம், 71. கடந்த பிப்ரவரி 29 ல் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
 கன்னடத்தில் பல திரைப்படங்களை இயக்கிய துவாரகீஷ், 81 கடந்த ஏப்ரல் 16ம் தேதி உடல்நலக் குறைவால் இறந்தார்.
 கன்னட, தெலுங்கு சின்னத்திரை தொடர் நடிகையான பவித்ரா ஜெயராம், 39. ஆந்திராவின் கர்னுாலில் கடந்த மே மாதம் 11ம் தேதி நடந்த விபத்தில் இறந்தார்.
 நடிகை, பின்னணி பாடகி, மெட்ரோ ரயில் நிலையங்கள் பற்றிய அறிவிப்பு கூறும் வார்த்தைக்கு சொந்தகாரர் ஆன அபர்ணா, 58 கடந்த ஜூன் 11ல் புற்றுநோயால் இறந்தார்.
 கன்னட திரை உலகின் முன்னணி இயக்குனராக இருந்த குருபிரசாத், 52. கடந்த நவம்பர் 3ம் தேதி, மாதநாயக்கனஹள்ளியில் உள்ள வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

