
ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ், ஆட்சி அமைக்க முடியாது என்பதை உணர்ந்தே, 25 பேரை துணை முதல்வராக்குவதாக உறுதியளித்துள்ளார். தேர்தலில் போட்டியிடுவோர், கள யதார்த்தத்தை எதிர்கொள்ள வேண்டும். இதுபோன்ற பொய் வாக்குறுதிகள், பொதுமக்களிடம் எடுபடாது.
 தேவேந்திர பட்னவிஸ் மஹாராஷ்டிரா முதல்வர், பா.ஜ.,
அனைத்திலும் தோல்வி!
தே.ஜ., கூட்டணி தலைவர்கள் கூறும் இரட்டை இன்ஜின் அரசு, பீஹாரில் அனைத்து வகையிலும் தோல்வியை சந்தித்துள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகளையே அவர்கள் நிறைவேற்றாத நிலையில், பொய் வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றுகின்றனர்.
சச்சின் பைலட் மூத்த தலைவர், காங்கிரஸ்
மோடியை எதிர்ப்பது கடினம்!
பீஹார் சட்டசபை தேர்தலில், இமயமலை போன்று உயர்ந்த ஆளுமையை கொண்ட பிரதமர் மோடியை எதிர்த்து அரசியல் கட்சியினர் நிற்பது கடினம். எனினும், ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே இத்தகைய போட்டி ஜனநாயகத்தின் அழகுக்கு சான்றாகும்.
பாபா ராம்தேவ் யோகா குரு

