ADDED : நவ 19, 2024 06:31 AM
எலக்ட்ரானிக் சிட்டி: பெண் ஒருவர் சந்தேகத்துக்கு இடமாக உயிரிழந்தார். இதை பற்றி விசாரிக்கும்படி பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.
ஆந்திராவை சேர்ந்தவர் தீபா, 36. இவர் பெங்களூரின், எலக்ட்ரானிக் சிட்டியில் கணவர் சுரேஷுடன் வசித்து வந்தார். சுரேஷ் தச்சு வேலை செய்து வருகிறார். குடும்ப தேவைக்காக இவர் வங்கி மற்றும் தனியாரிடம் லட்சக்கணக்கான ரூபாய் கடன் பெற்றிருந்தார். பொருளாதார பிரச்னையால் கடனை அடைக்க முடியவில்லை.
கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுத்தனர். இதனால் தம்பதிக்குள் மனஸ்தாபம் ஏற்பட்டது. நேற்று மதியமும் வழக்கம் போன்று, இருவருக்கும் வாக்குவாதம் நடந்தது. சிறிது நேரத்துக்கு பின், தீபா, துாக்கிட்ட நிலையில் கிடந்தார்.
இவர் தற்கொலை செய்து கொண்டிருப்பது போன்று தோன்றினாலும், இவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாக தீபாவின் பெற்றோர், எலக்ட்ரானிக் சிட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். போலீசாரும்விசாரிக்கின்றனர்.

