sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பிரபல பாலிவுட் இயக்குனர் ஷியாம் பெனகல் மரணம்

/

பிரபல பாலிவுட் இயக்குனர் ஷியாம் பெனகல் மரணம்

பிரபல பாலிவுட் இயக்குனர் ஷியாம் பெனகல் மரணம்

பிரபல பாலிவுட் இயக்குனர் ஷியாம் பெனகல் மரணம்


ADDED : டிச 24, 2024 04:39 AM

Google News

ADDED : டிச 24, 2024 04:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மும்பை: சர்வதேச அளவில் இந்திய திரைப்படங்களுக்கு அங்கீகாரம், அடையாளத்தை ஏற்படுத்திய, பிரபல பாலிவுட் இயக்குனர் ஷியாம் பெனகல், 90, உடல் நலக் குறைவால் நேற்று காலமானார்.

கடந்த, 1970 மற்றும் 1980களில் பல விருது பெற்ற படங்களை இயக்கியவர் பிரபல இயக்குனர் ஷியாம் பெனகல். சிறுநீரகக் கோளாறு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள மருத்துவமனையில் அவர் நேற்று மாலை உயிரிழந்தார்.

உலகப் புகழ்பெற்ற ஷியாம் பெனகல், மனித உறவுகள் மற்றும் வாழ்க்கையின் எதார்த்தத்தை விளக்கும் பல படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கிய, அங்கூர் என்ற ஹிந்தி படம், இந்திய சினிமாவின் மிக முக்கியமான படமாக கருதப்படுகிறது. சர்வதேச அளவில், இந்திய திரைப்படங்களுக்கு இதன் வாயிலாக அங்கீகாரம் கிடைத்தது.

மஹாராஷ்டிர மாநிலம் புனேயில் உள்ள திரைப்பட மையத்தின் தலைவராகவும் இருந்துள்ளார். பத்மஸ்ரீ, பத்மபூஷண், தாதா சாகேப் பால்கே உட்பட பல விருதுகளை பெற்றுள்ளார்.

இவர் இயக்கிய, அங்கூர், பூமிகா, ஜூனுன், அரோஹன், மந்தன் உள்ளிட்ட ஏழு படங்களுக்காக தேசிய விருதைப் பெற்றுள்ளார். இவர் ஒட்டுமொத்தமாக, 18 தேசிய விருதுகளை பெற்றுள்ளார்.

பல குறும்படங்களையும் இயக்கியுள்ளார்.






      Dinamalar
      Follow us