UPDATED : அக் 13, 2026 05:59 PM
ADDED : அக் 13, 2026 05:54 PM
புதுடில்லி: டில்லி புறநகர் பகுதியான ரன்ஹோலாவில், மொசின் கான் என்ற ரவுடி சுட்டுக் கொல்லப்பட்டார்
விகாஸ் நகரின், கமாண்டர் சவுக் பகுதியை சேர்ந்தவர், ரவுடி மொசின்கான். இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் 14 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், டில்லியின் புறநகர் பகுதியான ரன்ஹோலாவில், இரு ரவுடி கும்பல்களுக்கு இடையே நடந்த சண்டையில், ரவுடி மொசின்கான் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது கூட்டாளிகள், அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு அவர் உயிரிழந்தார். தகவல் அறிந்த போலீசார், இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணையை துவக்கியுள்ளனர்.
இந்த கொலைக்கான நோக்கம், துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பான சூழ்நிலை குறித்து, போலீசாருக்கு உறுதியான தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை. சந்தேகத்தின் அடிப்படையில், சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.
