ADDED : ஜூன் 04, 2026 03:45 AM

மத்தியில் காங்., ஆட்சியில் இருந்த, 2005 - 14 வரையிலான காலத்தில், நாடு முழுதும் லட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்தனர். ஆனால், பா.ஜ., ஆட்சிக்கு வந்ததில் இருந்து இந்த நிலை தலைகீழாக மாறி உள்ளது. பிரதமர் மோடி ஆட்சியில், விவசாயிகள் வருமானம் இரு மடங்கு உயர்ந்து, அவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
யோகி ஆதித்யநாத் உ.பி., முதல்வர், பா.ஜ.,
உங்க அப்பா வீட்டு சொத்தா?
தெலுங்கானாவுக்கு நான் வருவதை அங்குள் ள தலைவர்கள் விமர்சிக்கின்றனர். என்னை கேள்வி கேட்க முதலில் அவர்கள் யார்? தெலுங்கானா என்ன உங்கள் அப்பா வீட்டு சொத்தா? என்னை கேள்வி கேட்க அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை. ஆந்திராவில் இருந்து தெலுங்கானா பிரிக்கப்பட்ட விதம் கண்ணியமான முறையில் நடக்கவில்லை.
பவன் கல்யாண் ஆந்திர துணை முதல்வர், ஜனசேனா கட்சி
உங்களை யார் தடுத்தது?
ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் ஒரு விஷயத்தை நினைவில் கொள்ள வேண்டும். சந்தேகமே வேண்டாம்... தெலுங்கானா இந்த மண்ணின் மைந்தர்களுக்கும், இங்கு வசிக்கும், 4 கோடி மக்களுக்கும் சொந்தமானது. பவன் கல்யாண் குடும்பமே ஹைதராபாதில் தான் வசிக்கிறது. தாராளமாக தங்குங்கள், உங்களை யார் தடுத்தது?
கே.டி.ராமா ராவ் செயல் தலைவர், பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சி
