ADDED : ஜன 21, 2024 01:12 AM
பங்கார்பேட்டை :: பங்கார்பேட்டையில் யானைகள் அட்டகாசத்தை தடுக்க வேண்டும். யானைகளால் நாசமாக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடாக ஏக்கருக்கு 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்று பங்கார்பேட்டை தாலுகா அலுவலகம் முன் விவசாயிகள் நேற்று போராட்டம் நடத்தினர்.
காமசமுத்திரம் அருகே அடிக்கடி யானைகள் விளை நிலங்களில் புகுந்து, பயிர்களை நாசம் செய்து வருவதை பலமுறை தெரிவித்தும் எந்த பயனும் இல்லை.
வயல் பகுதியில் சோலார் மின் வேலி அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் அரசு கண்டுகொள்ளவில்லை என்று தெரிவித்து அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
அப்போது விவசாயிகள் சங்கத் தலைவர் நாராயண கவுடா கூறுகையில், “விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அமல்படுத்த தவறினால் குடியரசு தின விழாவில் மாவட்ட பொறுப்பு அமைச்சர் பைரதி சுரேஷை முற்றுகை செய்வோம். இழப்பீடுத் தொகையை விரைந்து வழங்க வேண்டும்,” என்றார்.

