டில்லியில் பதட்டம்: முன்னேறும் விவசாயிகள் பேரணி: கண்ணீர் புகை வீச்சு
டில்லியில் பதட்டம்: முன்னேறும் விவசாயிகள் பேரணி: கண்ணீர் புகை வீச்சு
UPDATED : பிப் 13, 2024 05:56 PM
ADDED : பிப் 13, 2024 10:33 AM
புதுடில்லி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி , முற்றுகை போராட்டத்துக்காக ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து விவசாயிகள் டில்லி நோக்கி புறப்பட்டனர். 500 க்கும் மேற்பட்ட டிராக்டர்கள் மற்றும் லாரிகளில் வந்த வண்ணம் உள்ளனர். அரியானா- பஞ்சாப் எல்லையான ஷம்பு என்ற பகுதியில் போலீசார் தடுத்து நிறுத்தினர். ஆனால் விவசாயிகள் தடுப்புகளை தள்ளி முன்னேறி சென்றனர். இதனால் பதட்டம் ஏற்பட்டது. தொடர்ந்து போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசினர்.
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிக்கு வேண்டுகோள்
சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞர்களின் சங்க தலைவர் ஆதிஷ் அகர்வாலா சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
அதில்,
'இடையூறு ஏற்படுத்தும் வகையிலும், மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும்
வகையிலும் விவசாயிகள் நடத்த இருக்கும் பேரணிக்கு எதிராக தாமாக முன்வந்து
நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக் குறிப்பிட்டுள்ளார்