ADDED : பிப் 13, 2024 05:42 PM

கோல்கட்டா: 'அடிப்படை உரிமைகளுக்குப் போராடியதற்காக கண்ணீர் புகை குண்டுகளால் விவசாயிகள் தாக்கப்படும் போது நம் நாடு எப்படி முன்னேறும்?' என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பி உள்ளார்.
இது குறித்து மம்தா பானர்ஜி கூறியிருப்பதாவது: விவசாயிகளின் எதிர்ப்பை அடக்குவதற்குப் பதிலாக, நமது தேசத்திற்குத் தீங்கு விளைவித்த அதிகார வெறி மற்றும் ஆட்சியின்மை ஆகியவற்றைத் தாழ்த்துவதில் பா.ஜ., கவனம் செலுத்த வேண்டும். அரசின் அடாவடித்தனத்திற்கு எதிராக நமது விவசாயிகளுடன் ஒற்றுமையாக நிற்போம்.
விவசாயிகள் மீது பா.ஜ.,வினர் நடத்திய தாக்குதல் கண்டனத்துக்குரியது. அடிப்படை உரிமைகளுக்குப் போராடியதற்காக கண்ணீர் புகை குண்டுகளால் விவசாயிகள் தாக்கப்படும் போது நம் நாடு எப்படி முன்னேறும்?. இவ்வாறு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பி உள்ளார்.