ADDED : செப் 30, 2025 08:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவனந்தபுரம்; கேரள மாநிலம் கொல்லம் அருகே திருட்டு வழக்கில் கைதான தந்தை மகன் விலங்குடன் தப்பி ஓடினர்.
திருவனந்தபுரம் அருகே ஆற்றிங்கல்லைச் சேர்ந்தவர் அயூப் கான் 56. மகன் செய்யது அலவி 18. இருவர் மீதும் திருட்டு வழக்குகள் உள்ளன.
இருவரும் சேர்ந்து திருடச் செல்வது வழக்கம். சில நாட்களுக்கு முன் திருவனந்தபுரம் அருகே பாலோடு பகுதியில் ஒரு வீட்டில் இரண்டு பேரும் திருடினர். வயநாட்டில் தலைமறைவாக இருந்த இருவரையும் போலீசார் கைது செய்து அழைத்து வந்தனர்.
கொல்லம் அருகே வந்தபோது இருவரும் இயற்கை உபாதைக்காக ஜீப்பை நிறுத்தக்கோரினர். ரோட்டோரம் வாகனத்தை நிறுத்தி அனுப்பியதும் இருவரும் கைவிலங்குடன் ஓட்டம் பிடித்தனர்.
மலைப்பகுதி என்பதால் எளிதில் தப்பினர். இருவரையும் படிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.