இரு மகள்களை ஐந்து ஆண்டாக பலாத்காரம் செய்த தந்தை கைது
இரு மகள்களை ஐந்து ஆண்டாக பலாத்காரம் செய்த தந்தை கைது
ADDED : ஜூன் 27, 2025 11:59 PM
ஜெய்ப்பூர் : ராஜஸ்தானில், இரு மகள்களை தந்தையே ஐந்து ஆண்டுகளாக பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தானின் ஜெய்ப்பூரை சேர்ந்த பெண்ணுக்கு, 18 வயதுக்கு உட்பட்ட இரு மகள்கள் உள்ளனர். அவர்கள் கடந்த 20ல் வயிறு வலிப்பதாக கூறியதை அடுத்து தாயார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
அவர்களிடம் டாக்டர் விசாரணை நடத்தியபோது, தங்கள் இருவரையும் தந்தையே பலாத்காரம் செய்ததாக தெரிவித்தனர்.
மகள்களை தந்தை பலாத்காரம் செய்தது தாய்க்கு தெரிந்திருந்தாலும், அவர் பயந்து போலீசில் புகார் தருவதை தவிர்த்தார். இதையடுத்து தன்னார்வ அமைப்பு உதவியுடன் சிறுமியர் மற்றும் தாய்க்கு கவுன்சிலிங் தரப்பட்டது.
கவுன்சிலிங்கை ரகசிய கண்காணிப்பு கேமரா உதவியுடன் பதிவு செய்தபோது மகள்களை, அவர்களது தந்தை ஐந்து ஆண்டுகளாக பலாத்காரம் செய்தது தெரியவந்தது. சிறுமியரின் வாக்குமூலம் அடிப்படையில் சதார் போலீஸ் ஸ்டேஷனில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மேலும், சிறுமியருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவர்கள் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது உறுதியானது.
இதையடுத்து, மகள்களை பலாத்காரம் செய்த தந்தையை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.