ADDED : செப் 28, 2024 11:37 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: டில்லியில், தென் மேற்கு டில்லி மாவட்டத்தில் உள்ள ரங்புரி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர், ஹீராலால் சர்மா.
இவரது மனைவி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் புற்றுநோயால் உயிரிழந்து விட்டார்.
இவருக்கு, 20 - 26 வயதில், நான்கு மகள்கள் உள்ளனர். இதில், இரு மகள்கள் மாற்றுத்திறனாளிகள். கடந்த சில நாட்களாக, ஹீராலால் சர்மாவின் வீடு பூட்டியே கிடந்தது. அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வருவதாக, அக்கம்பக்கத்தினர் போலீசுக்கு நேற்று தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், கதவை உடைத்து உள்ளே சென்றனர். அதில் ஒரு அறையில் ஹீராலால் சர்மா இறந்து கிடந்தார். மற்ற அறையில், நான்கு பெண்கள் இறந்து கிடந்தனர்.
ஐந்து பேரின் உடல்களில் எந்த காயங்களும் இல்லை. அந்த வீட்டில் இருந்து, மூன்று விஷப் பொட்டலங்கள் கைப்பற்றப்பட்டன.