sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மணமகன் டான்ஸ் ஆடியதால் திருமணத்தை பாதியில் நிறுத்திய மாமனார்

/

மணமகன் டான்ஸ் ஆடியதால் திருமணத்தை பாதியில் நிறுத்திய மாமனார்

மணமகன் டான்ஸ் ஆடியதால் திருமணத்தை பாதியில் நிறுத்திய மாமனார்

மணமகன் டான்ஸ் ஆடியதால் திருமணத்தை பாதியில் நிறுத்திய மாமனார்

25


ADDED : பிப் 03, 2025 05:11 AM

Google News

ADDED : பிப் 03, 2025 05:11 AM

25


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி : டில்லியில் வரவேற்பு நிகழ்ச்சியில், பிரபல ஹிந்தி பாடலுக்கு மணமகன் நடனமாடியதால், கோபமடைந்த பெண்ணின் தந்தை திருமணத்தை பாதியில் நிறுத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வரவேற்பு நிகழ்ச்சி


டில்லியைச் சேர்ந்த 26 வயது இளைஞருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கும் சமீபத்தில் திருமண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பெண்ணின் வீட்டில் நடந்த திருமணத்தை காண, மணமக்களின் உறவினர்களும், நண்பர்களும் குவிந்தனர்.

திருமணத்துக்கு முந்தைய நாள் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி நடந்த மணமகன் ஊர்வலத்தில், பேண்டு வாத்தியங்கள் முழங்க மணமகன் மற்றும் அவரது வீட்டார் பங்கேற்றனர்.

ஆடல் - பாடலுடன் உற்சாகமாக வந்த ஊர்வலம், மணப்பெண்ணின் வீட்டை அடைந்தது. மணமகன் மற்றும் மணமகள் வீட்டார் ஒருவரையொருவர் வரவேற்று உபசரித்து மகிழ்ந்தனர். உறவினர்களை குஷிபடுத்தும் வகையில் ஆடல் - பாடல் நிகழ்ச்சி நடந்தது. அப்போது, 'சோலி கீ பீச்சே க்யா ஹை...' என்ற பிரபல ஹிந்தி பாடல் ஒலிபரப்பப்பட்டது.

அதைக் கேட்ட மணமகனின் நண்பர்கள் உற்சாக நடனத்தில் ஈடுபட்டனர். மணமகனையும் ஆடச் சொல்லி அவர்கள் வற்புறுத்தினர். இதைத் தொடர்ந்து, அந்த பாடலுக்கு மணமகன் மகிழ்ச்சி பொங்க நடனமாடினார்.

சர்ச்சை


இதனால், திடீரென ஆத்திரமடைந்த பெண்ணின் தந்தை, பாரம்பரியமிக்க தங்கள் குடும்பத்தினர் முன்பு மணமகன் அநாகரிகமாக நடந்து கொண்டதாக கூறி, நிகழ்ச்சி நடந்த அரங்கில் இருந்து வெளியேறினார். அது மட்டுமின்றி உடனடியாக திருமணத்தை நிறுத்தவும் உத்தரவிட்டார். இதனால், மணப்பெண் உட்பட அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

பொழுதுபோக்குக்காகவும், விளையாட்டாகவும் நடனமாடியதாக மணமகன் மற்றும் அவரது குடும்பத்தினர் எடுத்துக் கூறியும், பெண்ணின் தந்தை அதை காதில் வாங்கவில்லை. திருமணத்தை நிறுத்தியதுடன், மாப்பிள்ளை வீட்டாருடன் யாரும் இனி தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என தன் குடும்பத்தாருக்கு உத்தரவிட்டார்.

இதனால், மகிழ்ச்சி ததும்ப துவங்கிய திருமண கொண்டாட்டம் களையிழந்தது. மணமக்கள் இருவரும் கண்ணீர் மல்க பிரிந்தது காண்போரை கலங்க செய்தது.

கடந்த 1993ல் வெளிவந்த கல்நாயக் படத்தில் இடம்பெற்ற 'சோலி கீ பீச்சே க்யா ஹை...' பாடல், சமீபத்தில் வெளியான க்ரூ படத்திலும் ரீமேக் செய்யப்பட்டிருந்தது. பாடல் முதன்முதலில் வெளிவந்தபோதே, அதில் ஆபாச கருத்துகள் இருப்பதாக சர்ச்சையும், எதிர்ப்பும் எழுந்தது.






      Dinamalar
      Follow us