தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/23வது மாடியில் இருந்து தவறி விழுந்த தந்தை, மகன் ரத்த வெள்ளத்தில் பலி

23வது மாடியில் இருந்து தவறி விழுந்த தந்தை, மகன் ரத்த வெள்ளத்தில் பலி

23வது மாடியில் இருந்து தவறி விழுந்த தந்தை, மகன் ரத்த வெள்ளத்தில் பலி


UPDATED : அக் 31, 2026 03:56 PM

ADDED : அக் 31, 2026 03:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 31, 2026 03:56 PM ADDED : அக் 31, 2026 03:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நொய்டா: கிரேட்டர் நொய்டா மேற்கில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின், 23-வது தளத்திலிருந்து விழுந்ததில், தந்தையும், 11 வயது மகனும் உயிரிழந்தனர்.

மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் ரந்தீப் பத்ரா,40. அவரது மனைவி அம்ரிதா, 36. இவர்களுக்கு ஆறாம் வகுப்பு படிக்கும் 11 வயது மகன் உள்ளார். இவர்கள் கவுர் சிட்டி 2-ல் உள்ள, ‘மஹாகுன் மைவுட்ஸ்’ என்ற அடுக்குமாடி குடியிருப்பில், 23வது தளத்தில் வசித்து வந்தனர். ரந்தீப்பும், அவரது மனைவி அம்ரிதாவும், புதுடில்லியில் உள்ள மத்திய செயலகத்தில் பிரிவு அதிகாரிகளாக பணியாற்றினர்.

நேற்று முன் தினம் அதிகாலை, அடுக்குமாடி குடியிருப்பின் பாதுகாப்புப் பணியாளர் ஒருவர், ஒரு நபரும், சிறுவனும் மேலிருந்து விழுந்ததாகக் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். பிஸ்ராக் போலீசார் அங்கு விரைந்தனர். இது குறித்து அமரிதாவுக்கு எதுவும் தெரியவில்லை.

அவர்கள் பால்கனியின் பின்புறப் பகுதியில் பூச்செடிகளை வளர்த்திருந்தனர். அதிகாலையில் ரந்தீப் பந்ராவும், அவரது மகனும் பூக்களைப் பறித்துக் கொண்டிருந்தபோது கீழே விழுந்துள்ளனர். அந்த பால்கனியில் இருந்த தடுப்புச் சுவர் 4 அங்குல உயரம் மட்டுமே இருந்ததது. அங்கு பாதுகாப்பு கிரில் எதுவும் இல்லை.

ரத்தவெள்ளத்தில் இருந்த ரந்தீப் பந்ராவும், அவரது மகனும், உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

பால்கனிக்கு அருகில் வளர்ந்திருந்த மரத்தின் கிளைகளிலிருந்து, ஏணியை பயன்படுத்தி சிறுவன் பூக்களைப் பறிக்க முயன்றுள்ளான். அவன் ஏணியின் மீது தடுமாறிய போது, அவனை காப்பாற்ற முயன்றபோது ரந்தீப்பும் தடுமாறி, இருவரும் கீழே விழுந்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இருப்பினும், பிரதேச பரிசோதனைக்கு பிறகு நடக்கும் விசாரணையில் முழு விபரம் தெரியவரும் என்று போலீசார் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us