தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/இந்தியா/ மின்பொறியியல் சிக்கி தந்தை, மகன் பலி

மின்பொறியியல் சிக்கி தந்தை, மகன் பலி

மின்பொறியியல் சிக்கி தந்தை, மகன் பலி


ADDED : நவ 15, 2024 06:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 15, 2024 06:27 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாலக்காடு : பாலக்காடு அருகே, வயலில் காட்டுப்பன்றிக்கு வைத்திருந்த மின்பொறியில் சிக்கி, தந்தையும் மகனும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், வாளையார் கிழக்கு அட்டப்பள்ளம் மாகாளிக்காடு பகுதியை சேர்ந்த விவசாயி மோகனன், 60. இவரது மகன் அனிருத், 20. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, 6:30 மணிக்கு நிலத்துக்கு கால்வாயில் இருந்து தண்ணீர் திறந்து விட இருவரும் சென்றுள்ளனர்.

அப்போது, அருகிலுள்ள தனியார் மோட்டார் அறையில் இருந்து நேரடியாக மின்கம்பியை பயன்படுத்தி காட்டுப்பன்றிக்கு வைத்திருந்த மின்பொறியியல் சிக்கி, கால்வாயின் அருகே இருவரும் விழுந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இரவு நேரமாகியும், நிலத்துக்கு நீர் பாய்ச்ச சென்ற இருவரும் திரும்பி வராததால், சந்தேகம் அடைந்த உறவினர்கள், வயலுக்கு சென்று தேடியுள்ளனர். அப்போது, தந்தையும், மகனும் கால்வாய் அருகே, மின்பொறியில் சிக்கி, மின்சாரம் பாய்ந்து இறந்து கிடப்பதை கண்டனர்.

இதுபற்றி, தகவல் அறிந்த போலீசார், தீயணைப்பு படையினர், மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதையடுத்து மின் பொறி இணைப்பை துண்டித்த பின், இருவரின் உடல்களையும் மீட்டு, பாலக்காடு மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

நேற்று காலை பிரேத பரிசோதனைக்கு பின், இருவரின் சடலமும் உறவினர்களிடம் ஒப்படைத்தன. சம்பவம் குறித்து வாளையார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

இது குறித்து போலீசார் கூறுகையில், 'மோட்டார் அறையில் இருந்து நேரடியாக கம்பியை பயன்படுத்தி மின்சாரம் பாயவிட்டது யார் என்பது குறித்து விசாரித்து வருகிறோம்,' என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us