UPDATED : நவ 23, 2026 04:40 PM
ADDED : நவ 23, 2026 04:40 PM
முசாபர் நகர்: உத்தர பிரதேசத்தில், முன்பகை காரணமாக தந்தை – மகனை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தவர்களை போலீசார் தேடுகின்றனர்.
உ.பி., மாநிலம், முசாபர் நகர் மாவட்டத்தில், உத்தராகண்ட் மாநில எல்லையில் அமைந்துள்ள தாதுத்பூர் என்ற பகுதியில் வசித்தவர் முக்தியார் சிங், 65. இவரது மகன் சுக்விந்தர் சிங், 35.
சம்பவத்தன்று, இவர்கள் இருவரையும் பைக்கில் வந்த சிலர், துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு விட்டு தப்பினர். ரத்த வெள்ளத்தில் சரிந்த இருவரும், அதே இடத்தில் துடிதுடித்து உயிரிழந்தனர்.
தகவல் அறிந்து வந்த போலீசார், இரு உடல்களையும் மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து கொலையாளிகளை தேடுகின்றனர்.
முசாபர் நகர் மாவட்ட எஸ்.பி., சூரஜ்குமார் ராய் கூறுகையில், “முன் பகை காரணமாக இந்த இரட்டைக் கொலை நடந்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. கொலையாளிகளை பிடிக்க நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன,” என்றார்.
