ADDED : நவ 11, 2024 05:32 AM

மங்களூரு: குடும்ப தகராறில், தனது 2 வயது ஆண் குழந்தையுடன், தற்கொலை செய்ய முற்பட்டவர் காப்பாற்றப்பட்டார்.
மங்களூரு கைகம்ப் பகுதியை சேர்ந்தவர் சந்தீப். குடும்ப தகராறு காரணமாக, தனது 2 வயது ஆண் குழந்தையுடன், குருபுரா பாலத்தின் மீது ஏறி நின்று கொண்டிருந்தார். இதை பார்த்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். அவரை கீழே இறங்குமாறு அறிவுறுத்தினர். நைசாக அவரிடம் பேச்சு கொடுத்து கொண்டிருந்தனர்.
இதற்கிடையில், போலீசாருக்கு சிலர் தகவல் கொடுத்தனர். அங்கு வந்த அவர்கள், அந்நபரிடம் பேசி சமாதானம் செய்தனர். நீண்ட போராட்டத்திற்குப் பின் குழந்தையுடன் அவரை, பாலத்திலிருந்து கீழே இறக்கினர். அப்பகுதியினர் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
10.11.2024/hariharan
11-hari-007
பாலத்தில் நின்றபடி, குழந்தையுடன் தற்கொலைக்கு முயற்சித்த நபர்.
10.11.2024/hariharan
11-hari-007
பாலத்தில் நின்றபடி, குழந்தையுடன் தற்கொலைக்கு முயற்சித்த நபர்.