6 வயது மகன் கொலை; இந்திய பெண் அமெரிக்க போலீசாரால் கைது
6 வயது மகன் கொலை; இந்திய பெண் அமெரிக்க போலீசாரால் கைது
ADDED : ஆக 21, 2025 10:30 AM

புதுடில்லி: 6 வயது மகன் கொலை வழக்கில் அமெரிக்க போலீசாரால் தேடப்பட்டு வந்த பெண் குற்றவாளியை இந்திய அதிகாரிகளின் துணையுடன் எப்பிஐ (FBI) அதிகாரிகள் கைது செய்தனர்.
டெக்ஸாஸில் வசித்து வந்த இந்தியாவைச் சேர்ந்த சிண்டி ரோட்ரிக்ஸ் சிங் என்பவர் கடந்த 2023ம் ஆண்டு தனது 6 வயது மகனை கொலை செய்து, இந்தியாவிற்கு தப்பியோடி வந்துள்ளார். இது தொடர்பாக டாரன்ட் கவுன்டி பிடிவாரன்ட் பிறப்பித்திருந்தது.
இதையடுத்து, சேர்ந்த சிண்டி ரோட்ரிக்ஸ் சிங்கை, தேடப்படும் முக்கிய 10 குற்றவாளிகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டார். மேலும், சிண்டி ரோட்ரிக்ஸ் குறித்து துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ.22 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்திய அதிகாரிகளின் உதவியுடன், இந்தியாவில் பதுங்கியிருந்த சிண்டி ரோட்ரிக்ஸ் சிங்கை எப்பிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். உடனடியாக அவர் நாடு கடத்தப்பட்டு, டெக்ஸாஸ் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளார்.