ADDED : ஆக 27, 2025 02:22 AM

சிறையில் அடைக்கப்படும் பிரதமர், முதல்வர்கள் மற்றும் அமைச்சர்களை பதவி நீக்கம் செய்ய மத்திய அரசு கொண்டு வந்துள்ள மசோதா மிகவும் வரவேற்கத்தக்கது. இதை பார்த்து, ஊழல் நிறைந்த குடும்ப கட்சிகள் கலக்கமடைந்துள்ளன. இந்த மசோதாவால் நிச்சயம் பாதிக்கப்படுவோம் என்பதை, 'இண்டி' கூட்டணி கட்சிகள் உணர்ந்துள்ளன.
சுவேந்து அதிகாரி மூத்த தலைவர், பா.ஜ.,
'பிளாக்மெயில்' மசோதா!
நம் நாட்டில் சர்வாதிகாரம் உச்சத்தில் உள்ளது. வறுமை, வேலையின்மை, விவசாயிகளின் நிலை குறித்து விவாதிக்க மத்திய அரசுக்கு நேரம் இல்லை. அதே சமயம், அரசியல் கட்சிகளை, 'பிளாக்மெயில்' செய்வதற்காக, பதவி பறிப்பு மசோதாவை கொண்டு வந்துள்ளது. மக்கள் நலனில் மத்திய அரசுக்கு அக்கறை இல்லை என்பதையே இது காட்டுகிறது.
தேஜஸ்வி யாதவ் தலைவர், ராஷ்ட்ரீய ஜனதா தளம்
ஒருபோதும் பலிக்காது!
மேற்கு வங்க மாநில மக்களை, திருடர்கள் என பிரதமர் நரேந்திர மோடி அழைத்ததை ஏற்க முடியாது. பிரதமர் பதவியை நான் மதிக்கிறேன்; மரியாதை கொடுக்கிறேன். அதே போல், அவரும் செய்ய வேண்டும். ஓட்டுக்காக பல தந்திரங்களை செய்யும் பா.ஜ.,வின் எண்ணம், மேற்கு வங்கத்தில் ஒருபோதும் பலிக்காது.
மம்தா பானர்ஜி மேற்கு வங்க முதல்வர், திரிணமுல் காங்.,

