ADDED : பிப் 18, 2025 12:30 AM

ஒவ்வொரு
நாளும் தன் நிலைப்பாட்டை அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா மாற்றிக்
கொண்டே வருகிறார். அடுத்த ஆண்டு நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில், பா.ஜ.,
தோற்று விடும் என்பது அவருக்கு தெரிந்துள்ளது. இதனால் வாய்க்கு வந்தபடி
அவர் உளறி வருகிறார்.
கவுரவ் கோகோய்
லோக்சபா எம்.பி., - காங்.
கும்பமேளா அர்த்தமற்றது!
என்னை பொறுத்தவரை மஹா கும்பமேளா என்பது அர்த்தமற்ற ஒன்று. புதுடில்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு, மத்திய அரசின் அலட்சியமே காரணம். இதற்கு பொறுப்பேற்று, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜினாமா செய்ய
வேண்டும்
லாலு பிரசாத் யாதவ்
தலைவர், ராஷ்ட்ரீய ஜனதா தளம்
கட்சியின் அடுத்த வாரிசு!
கன்ஷிராமால் நிறுவப்பட்ட பகுஜன் சமாஜ், தனிப்பட்ட உறவுகளை விட கட்சியின் நலன்களுக்கே முன்னுரிமை அளிக்கிறது. அவரது அரிச்சுவடுகளை பின்பற்றி கட்சிக்காக கடைசி மூச்சு வரை பாடுபடுவேன். அவரை பின்பற்றி கட்சியை அடுத்த பாதைக்கு அழைத்துச் செல்பவரே, கட்சியின் அடுத்த வாரிசு.
மாயாவதி
தலைவர், பகுஜன் சமாஜ்
,

