தமிழக தேர்தல் நெருங்குவதால் அச்சம்: டில்லிக்கு பறக்க துடிக்கும் ஐஏஎஸ் அதிகாரிகள்!
தமிழக தேர்தல் நெருங்குவதால் அச்சம்: டில்லிக்கு பறக்க துடிக்கும் ஐஏஎஸ் அதிகாரிகள்!
ADDED : அக் 05, 2025 07:40 AM

டில்லி அதிகாரிகள் வட்டாரங்களில் குறிப்பாக தமிழக அதிகாரிகள் மத்தியில் ஒரு சில விஷயங்கள் குறித்து பரபரப்பாக அலசப்படுகிறது. அடுத்து யார் ஆட்சி அமைப்பர், திமுக ஆட்சி அமைக்காவிட்டால் தமிழகத்தில் முக்கிய பொறுப்புகளில் உள்ள அதிகாரிகளுக்கு என்ன ஆகும் என பல விவகாரங்கள் விவாதிக்கப்படுகின்றன.
ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் வட்டாரங்களில் ஒரு குறிப்பிட்ட தமிழக அதிகாரி குறித்து பேசப்படும் விஷயம் இதுதான். அந்த அதிகாரி டில்லியில் முக்கிய பொறுப்பில் இருந்தவர். பின், தமிழகத்திற்கு மாறுதலில் சென்று விட்டார். இந்த அதி காரி ஏறக்குறைய தி.மு.க..வின் செய்தி தொடர்பாளராகவே மாறிவிட்டார் என சொல்கின்றனர்.
தி.மு.க., தோல்வி அடைந்தால், தான் பந்தாடப் படுவதோடு, அடுத்த வரும் அரசு தன்னை வாட்டி வதைக்கும் என்பதை அந்த அதிகாரி நன்றாக உணர்ந்துள்ளாராம்.
எனவே, டிசம்பர் மாதத்திற்குள் டில்லிக்கு மாறுதலாகி வந்துவிட வேண்டும் என காய்களை நகர்த்தி வருகிறாராம் அந்த அதிகாரி. ஆனால், முதல்வர் இதற்கு சம்மதிப்பாரா என்பது கேள்விக்குறி.
இந்த அதிகாரி மட்டுமல்லாமல் வேறு சில அதிகாரிகளும், டில்லி சென்றுவிட வேண்டும் என்ற முடிவில் உள்ளனர். முதல்வருக்கு மிகவும் நெருக்கமான ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஒரு வர், தலைமை செயலர் பதவிக்கு வர முயற்சிகள் செய்து வருகிறாராம். அவர், விரைவில் தலைமை செயலராகி விடுவார் என்கின்றனர்.
இவர் தலைமையில் சட்டசபை தேர்தலைச் சந்திக்க முதல்வர் விரும்புவதாகவும் சொல்லப்படுகிறது. இதனால், இந்த அதிகாரியின் சீனியர் இருவர் டில்லி வர துடிக்கின்றனர். ஆனால், மூன்று அதிகாரிகளையும் டில்லிக்கு அனுப்ப தமிழக அரசு அனுமதி அளிக்குமா, அதற்கு மத்திய அரசு சம்ம திக்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.