ADDED : நவ 26, 2025 06:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொச்சி: கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலில், மண்டல பூஜை, மகர விளக்கு காலத்தையொட்டி தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
அவர்களுக்கு இலவசமாக புலாவ் மற்றும் சாம்பார் வழங்கப்படுகிறது. இந்நிலையில், இந்த உணவுக்கு பதிலாக கேரள பாரம்பரிய விருந்து வழங்க திருவாங்கூர் தேவசம் போர்டு முடிவு செய்துள்ளது.
தேவசம் போர்டு தலைவர் ஜெயகுமார் கூறுகையில், ''பக்தர்களுக்கு 'கேரள ஸத்யா' என்ற பாரம்பரிய விருந்து வழங்க முடிவு செய்துள்ளோம். விரைவில் அமலுக்கு வரும். பாரம்பரிய உணவுடன், பாயசம், பப்படம் வழங்கப்படும்,'' என்றார்.

