ராஜஸ்தானில் போர் விமானம் நொறுங்கியது: விமானி தப்பினார்
ராஜஸ்தானில் போர் விமானம் நொறுங்கியது: விமானி தப்பினார்
ADDED : மார் 12, 2024 03:09 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஜெய்சல்மர்: ராஜஸ்தானின் ஜெய்சால்மரில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான தேஜஸ் போர் விமானம் நொறுங்கியது. அதிர்ஷ்டவசமாக விமானி உயிர் தப்பினார்.
ராஜஸ்தானில் தேஜஸ் போர் விமானம் பயிற்சியில் ஈடுபட்டு இருந்த போது, ஜெய்சால்மரில் மாணவர் விடுதி அருகே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. விமானத்தில் இருந்த விமானி, அதிர்ஷ்டவசமாக உயிருடன் மீட்கப்பட்டார். விபத்திற்கான காரணம் குறித்து விசாரணைக்கு விமானப்படை உத்தரவு பிறப்பித்து உள்ளது.

