sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சினிமா இயக்குனர் குருபிரசாத் தற்கொலை; கடன்காரர்கள் தொல்லையா?

/

சினிமா இயக்குனர் குருபிரசாத் தற்கொலை; கடன்காரர்கள் தொல்லையா?

சினிமா இயக்குனர் குருபிரசாத் தற்கொலை; கடன்காரர்கள் தொல்லையா?

சினிமா இயக்குனர் குருபிரசாத் தற்கொலை; கடன்காரர்கள் தொல்லையா?


ADDED : நவ 03, 2024 11:37 PM

Google News

ADDED : நவ 03, 2024 11:37 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாதநாயகனஹள்ளி; கன்னட திரையுலக பிரபல இயக்குனரும், நடிகருமான குரு பிரசாத் தற்கொலை செய்து கொண்டார். இவரது மறைவுக்கு, அரசியல் தலைவர்கள் உட்பட, பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கன்னட திரையுலகின் பிரபல இயக்குனராக திகழ்ந்தவர் குருபிரசாத், 52. இவர், தன் 14வது வயதிலேயே ராஜ்குமார், சங்கர்நாக் படங்களை பார்த்து இயக்குனராக கனவு கண்டவர். இதற்காக தன்னை தயார்படுத்தினார். பணம் தேவைப்பட்டதால், ஹிந்துஸ்தான் லிமிடெட் நிறுவனத்தில், ஐந்து ஆண்டுகள் பணியாற்றினார். சென்னையிலும் பணியாற்றியுள்ளார்.

கடந்த 2006ல், ஜக்கேஷ் நடிப்பில் மடா, எத்தேளு மஞ்சுநாதா திரைப்படங்களை இயக்கினார். அதன்பின் எரடனய சலா, ரங்கநாயகா, டைரக்டர் ஸ்பெஷல் என, அடுத்தடுத்த படங்களை இயக்கினார். பல படங்கள் சூப்பர் ஹிட்டாகின. இயக்குவதுடன் நின்று விடாமல், மைலாரி, ஹூடுகரு, 'குஷ்கா' உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

திருப்புமுனை


குருபிரசாத் இயக்கத்தில் திரைக்கு வந்த, டைரக்டர் ஸ்பெஷல் திரைப்படம் நடிகர் தனஞ்செயாவுக்கு திருப்புமுனையாக அமைந்தது. பிக் பாஸ் உட்பட, பல ரியாலிட்டி ஷோக்களிலும், குருபிரசாத் பங்கேற்றவர்.

தொழில் வாழ்க்கையில் முன்னேற்றம் கண்ட இவருக்கு, குடும்ப வாழ்க்கை சரியாக அமையவில்லை. முதல் மனைவியுடன் அவ்வளவாக அன்யோன்யம் ஏற்படவில்லை. அவரை பிரிந்த குருபிரசாத், இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

இதற்கிடையில் இவர் இயக்கிய சில படங்கள், பெட்டியில் சுருண்டன. அடுத்தடுத்த தோல்வியால் மனம் வருந்திய குருபிரசாத், குடிப்பழக்கத்துக்கு அடிமையானார். குடிப்பழக்கம் இருந்த காரணத்தால், குடும்பத்துடன் சேர்ந்திராமல், பெங்களூரின் மாதநாயகனஹள்ளியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், தனியாக வசித்து வந்தார்.

துர்நாற்றம்


கடந்த மூன்று, நான்கு நாட்களாக அவர் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. நேற்று காலை இவரது பிளாட்டில் இருந்து, துர்நாற்றம் வீசியது. இதை கவனித்த அக்கம், பக்கத்தினர் சந்தேகமடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அங்கு வந்த மாதநாயகனஹள்ளி போலீசார், வீட்டை திறந்து உள்ளே சென்று பார்த்த போது, குருபிரசாத் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. அவரது உடல் அழுகிய நிலையில் உள்ளதால், சில நாட்களுக்கு முன்பே, அவர் தற்கொலை செய்திருக்கலாம் என, கூறப்படுகிறது.

வறுமையான குடும்பத்தை சேர்ந்த இவர், இயக்குனராக திரையுலகில் நுழைந்து, பல வெற்றி படங்களை கொடுத்து, கோடிக்கணக்கான ரூபாய் சம்பாதித்தார். இந்த பணம் முழுதையும் செலவிட்டு, கடன் வாங்கியும் தயாரித்து, இயக்கிய ரங்கநாயகா படம் ஓடவில்லை. கடனாளியானார்; கடன்காரர்கள் நெருக்கடி கொடுத்தனர்.

இவர் 2016ல் சீனிவாஸ் என்பவரிடம், 30 லட்சம் ரூபாய் கடன் பெற்றிருந்தார். கடனுக்காக காசோலை அளித்திருந்தார். காசோலை 'பவுன்ஸ்' ஆனதால், குருபிரசாத் மீது, சீனிவாஸ் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இம்மாதம் 19ம் தேதி விசாரணைக்கு வருகிறது. இது போன்று இவர் பலருக்கு கொடுத்த காசோலைகளும் பவுன்ஸ் ஆனது. கைது பயம், குடும்ப பிரச்னை, கடன்காரர்களின் தொல்லையால் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என, கூறப்படுகிறது.

பிரபல இயக்குனராக இருந்த குருபிரசாத்தின் மறைவுக்கு, துணை முதல்வர் சிவகுமார், மத்திய அமைச்சர் குமாரசாமி, நடிகர்கள் சிவராஜ்குமார், ஜக்கேஷ், சுதீப் உட்பட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us