விபத்தில் நிதி அமைச்சக அதிகாரி பலி; சொகுசு கார் ஓட்டிய பெண் கைது
விபத்தில் நிதி அமைச்சக அதிகாரி பலி; சொகுசு கார் ஓட்டிய பெண் கைது
ADDED : செப் 16, 2025 03:08 AM

புதுடில்லி : டில்லியில், சொகுசு கார் மோதி நிதியமைச்சகத்தின் மூத்த அதிகாரி நவ்ஜோத் சிங், பலியான நிலையில், காரை ஓட்டிய பெண்ணை போலீசார் நேற்று கைது செய்தனர்.
டில்லியில் உள்ள மத்திய நிதி அமைச்சக அலுவலகத்தில் உள்ள பொருளாதார விவகாரங்கள் துறையின் துணைச் செயலராக நவ்ஜோத் சிங், 57, என்பவர் பணியாற்றி வந்தார்.
நொறுங்கியது கார் இவர், மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் நடத்தும் ஜி.எஸ்.டி., கூட்டங்களில் பங்கேற்றுள்ளார்.
பங்களா சாஹிப் குருத்வாராவுக்கு சென்ற நவ்ஜோத், தன் மனைவி சந்தீப் கவுருடன், இரு சக்கர வாகனத்தில் நேற்று முன்தினம் மதியம் டில்லி திரும்பினார்.
டில்லி கன்டோன்மென்ட் மெட்ரோ ரயில் நிலையம் அருகே ரிங் ரோட்டில் சென்ற போது, பின்னால் வந்த பி.எம்.டபிள்யு., சொகுசு கார் நவ்ஜோத் தம்பதி சென்ற இரு சக்கர வா கனம் மீது மோதியது.
இதில், சாலையில் துாக் கி வீசப்பட்ட நவ்ஜோத் சிங்குக்கு தலை, கை, கால் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. மனைவி சந்தீப்புக்கு தலையில் காயமும், பல இடங்களில் எலும்பு மு றிவும் ஏற்பட்டது. சம்பவ இடத்திலேயே அவர்கள் மயங்கி விழுந்தனர். விபத்தில் காரும் நொறுங்கி கவிழ்ந்தது.
அந்த காரை ஓட்டி வந்த தம்பதி, நவ்ஜோத் சிங் மற்றும் அவரது மனைவியை, வேறொரு வேனில் ஏற்றி, 19 கி.மீ., துாரம் தொலைவில் உள்ள தங்களுக்கு தெரிந்த, 'நியு லைப்' மருத்துவமனையில் சேர்த்தனர்.
காரை ஓட்டிய குருகிராமைச் சேர்ந்த ககன்ப்ரீத் என்ற பெண்ணும், அவரின் கணவரும் தொழிலதிபருமான பரிஷத்தும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
நவ்ஜோத்தை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக கூறினர். இதையடுத்து, வழக்கு பதிவு செய்த போலீசார், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ககன்ப்ரீத்தை நேற்று கைது செய்தனர்.
விபத்து நடந்த பகுதி யில் இருந்து வெகு தொலைவில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றதே நவ்ஜோத் சிங் உயிரிழப்புக்கு காரணமாக சொல்லப்படுகிறது.
விபத்து தொடர்பான வழக்கில் இருந்து தப்பவே, தொலைதுாரத்தில் தங்களுக்கு தெரிந்த மருத்துவமனையில் விபத்தை ஏற்படுத்தியவர்கள் சேர்த்ததாக கூறப்படுகிறது.
குற்றச்சாட்டு 'நவ்ஜோத்தை கொண்டு சென்ற மருத்துவமனை மிகவும் சிறியது. அது மட்டுமின்றி, காயங்களுடன் போராடிய அவருக்கு உடனடி சிகிச்சையும் வழங்கப்படவில்லை.
'விபத்து ஏற்படுத்திய தம்பதி அங்கேயே சிகிச்சை பெற்று வந்த நிலையில், போலீசாரிடம் இருந்து காப்பாற்றும் முயற்சியில் மருத்துவமனை நிர்வாகம் ஈடுபட்டது' என நவ்ஜோத் சிங்கின் உறவினர் கள் குற்றஞ்சாட்டினர்.