உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : மார் 28, 2026 01:59 AM

அ நிறம் | அளவு
புதுடில்லி: வடக்கு டில்லி மாவட்டத்தில் உள்ள திரி நகரில் நேற்று காலை தீப்பிடித்ததில், ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களில், 3 வயது குழந்தையும் அடக்கம்.
டில்லியின் வடக்கு பகுதியில் உள்ள அனஜ் மண்டி பகுதியில் உள்ள திரி மூர்த்தி பகுதியில் நேற்று காலை தீப்பற்றியது. தீயை அணைக்க உடனடியாக, மூன்று வாகனங்களில் வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்ட னர்.
காலை 7:00 மணிக்கு பற்றிய தீ, 7:45க்கு முழுமையாக அணைக்கப்பட்டது. இந்த விபத்தில் பிரீதம் லால், 38, அனிதா தேவி, 50, பாரத் லால், 32, சவும்யா, 3, மோனி, 27, ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
