காஷ்மீர் அருகே ராணுவ முகாமில் பயங்கர தீ விபத்து; விரைந்து செயல்பட்ட வீரர்கள்
காஷ்மீர் அருகே ராணுவ முகாமில் பயங்கர தீ விபத்து; விரைந்து செயல்பட்ட வீரர்கள்
ADDED : மே 04, 2025 06:19 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீநகர்; ஜம்மு காஷ்மீரில் ராணுவ முகாமில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் திடீர் பரபரப்பு நிலவியது.
இதுபற்றிய விவரம் வருமாறு:
லே பகுதியில் கல்லூரி ஒன்று உள்ளது. இதன் அருகில் அமைந்திருக்கும் ராணுவ முகாமில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கட்டடம் ஒன்றில் ஏற்பட்ட தீ, படிப்படியாக மற்ற பகுதிகளுக்கு பரவியது.
மளமளவென பரவிய தீயால் அங்கு திடீர் பரபரப்பு எழுந்தது. தகவலறிந்த ராணுவ வீரர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ பகுதிக்கு விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தும் பணியில் இறங்கினர்.
சிறிதுநேர போராட்டத்துக்கு பின்னர் தீ முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டது. இந்த விபத்தில் யாருக்கும் காயமோ, உயிரிழப்போ ஏற்படவில்லை. தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பதற்கான காரணங்கள் எதுவும் வெளியாகவில்லை.