டில்லி பா.ஜ., அலுவலகத்தில் தீ விபத்து: யாருக்கும் பாதிப்பில்லை
டில்லி பா.ஜ., அலுவலகத்தில் தீ விபத்து: யாருக்கும் பாதிப்பில்லை
ADDED : மே 16, 2024 05:25 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: டில்லியில் உள்ள மாநில பா.ஜ., அலுவலகத்தில் தீவிபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மின்கசிவு காரணமாக ஏற்பட்ட இந்த விபத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
டில்லியின் பண்டிட் பன்ட் மார்க் பகுதியில் டில்லி பா.ஜ., அலுவலகம் செயல்படுகிறது. மாலை 4:25 மணியளவில் இங்கு தீவிபத்து ஏற்பட்டது. இது குறித்து, தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
தகவல் அறிந்து நிகழ்வு இடத்திற்கு 3 வாகனங்களில் வந்த தீயணைப்பு துறையினர், ஒரு சில நிமிடங்களில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
மின்மீட்டர் அருகே மின்கசிவு ஏற்பட்டதால், தீவிபத்து ஏற்பட்டதாக பா.ஜ., வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்து உள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.