மருத்துவமனையில் தீ விபத்து பீஹாரில் 5 பேர் உயிரிழப்பு
மருத்துவமனையில் தீ விபத்து பீஹாரில் 5 பேர் உயிரிழப்பு
ADDED : ஜூன் 05, 2026 02:37 AM
முசாபர்புர்: பீஹாரின் முசாபர்புரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்தனர்.
பீஹார் மாநிலம் முசாபர்புரில் உள்ள பிரம்புரா பகுதியில் தனியார் மருத்துவமனை உள்ளது. இங்குள்ள ஐ.சி.யு., எனப்படும், தீவிர சிகிச்சை பிரிவில், 15 நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்நிலையில் நேற்று அதிகாலை திடீரென ஐ.சி.யு.,வில் தீப்பிடித்து அறை முழுதும் கரும் புகை பரவியது. இதனால் அங்கிருந்தவர்கள் ஓட்டம் பிடித்தனர். தீயணைப்பு படையினர் போராடி தீயை கட்டுப்படுத்தினர்.
எனினும் தீயில் கருகி ஐந்து நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்; பலர் காயம் அடைந்தனர். அவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
சம்பவம் குறித்து கலெக்டர் சுப்ரத் குமார் சென் கூறுகையில், ''ஐ.சி.யு.,வில் ஏற்பட்ட மின்கசிவே தீ விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது.
'' எனினும் தீ விபத்துக்கான உண்மையான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடக்கிறது. விபத்தில் பலியானவர்களின் உ டல்களை அடையாளம் காணும் பணி தீவிரமாக நடக்கிறது. விசாரணை நடத்த ஐந்து பேர் குழு நியமிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.
தீ விபத்தில் உயிரிழந்தோருக்கு முதல்வர் சாம்ராட் சவுத்ரி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் அவர்களது குடும்பத்துக்கு தலா, 4 லட்சம் ரூபாய் நிவாரணம் அறி வித்தார்.
