தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ பிளாஸ்டிக் ஆலையில் தீ 2 மணி நேரத்தில் தீயணைப்பு

 பிளாஸ்டிக் ஆலையில் தீ 2 மணி நேரத்தில் தீயணைப்பு

 பிளாஸ்டிக் ஆலையில் தீ 2 மணி நேரத்தில் தீயணைப்பு


ADDED : ஜன 14, 2026 02:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 14, 2026 02:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி:பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பு தொழிற்சாலையில் பற்றிய தீ, மளமளவென பல இடங்களுக்கும் பரவியது. 22 தீயணைப்பு வாகனங்களில் சென்ற வீரர்கள், தீயை அணைத்தனர்.

வடக்கு டில்லியின் நரேலா தொழில்பேட்டை பகுதியில் உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலையில் தீப்பிடித்ததாக, தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த இடத்திற்கு, 15 வாகனங்களுடன் விரைந்த தீயணைப்பு துறையினர், தீயை அணைக்க முயற்சித்தனர்.

எனினும், பக்கத்து கட்டடங்களுக்கும் தீ வேகமாக பரவியதால், கூடுதல் வாகனங்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. அதையடுத்து, இரண்டு மணி நேரம் போராடி தீயை வீரர்கள் அணைத்தனர்.

தீ விபத்துக்கான காரணம் குறித்து, போலீசாருடன் தீயணைப்பு வீரர்கள் விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us