உள்ளடக்கத்திற்கு செல்ல
UPDATED : அக் 05, 2026 12:00 AM
ADDED : அக் 04, 2026 02:34 PM
அ நிறம் | அளவு
புதுடில்லி: ஆடைத் தொழிற்சாலையில் நேற்று காலை தீப்பற்றியது. ஆடைகள் மற்றும் துணி பண்டல்கள் தீயில் கருகி சாம்பலாகின.
டில்லியின் காந்தி நகர், பிரதாப் காலியில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலையில் நேற்று காலை, 10:00 மணிக்கு தீப்பற்றியது. தகவல் அறிந்து, எட்டு வண்டிகளில் தீயணைப்பு படையினர் வந்தனர். மூன்று தண்ணீர் லாரிகளும் வரவழைக்கப்பட்டன. ஒரு மணி நேரம் போராடி காலை, 11.10 மணிக்கு தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். விற்பனைக்கு அனுப்ப தயாராக வைத்திருந்த ஆடைகள் மற்றும் துணி பண்டல்கள் தீயில் எரிந்து சாம்பலாகின. இந்த விபத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. தீப்பற்றியதற்கான காரணம் குறித்து தீயணைப்பு அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
